
மத்திய முப்படை வாரியத்தின் சார்பில் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு பிரதமரின் கல்வி உதவித் தொகை பெற ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்கான முழு தகவல்களை கீழே காணலாம்.
மத்திய அரசின் முப்படை வாரியத்தின் சார்பில் 2025 – 2026 – ம் கல்வியாண்டிற்கு பிரதமரின் கல்வி உதவித்தொகையானது தொழிற்கல்வியில் சேர்ந்துள்ள முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளான மகன் மற்றும் மகளுக்கு வழங்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் விண்ணப்பிக்க www.ksb.gov.in இணையதள பக்கத்திற்கு சென்று அதில் கேட்கப்பட்டுள்ள சான்றிதழ் மற்றும் விவரங்கள் பூர்த்தி செய்து டிசம்பர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர் தங்களுடைய குழந்தைகளின் முதலாம் ஆண்டு தொழிற்கல்வியில் பயிலுவதற்கு இவ்வாயப்பினை பயன்படுத்திக்கொண்டு விண்ணப்பிக்கலாம்.
மேலும், தகவல்கள் பெறுவதற்கு ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் சென்று அல்லது 04567–230 045 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.


