Follow Us on

Internet cafe

Follow Us on

Internet cafe

Join our channel

Internet cafe

அனைத்து குடிமக்களுக்கும் அரசு சேவைகளை எளிதாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதே INTERNET CAFE WEB PORTAL-லின் முக்கிய நோக்கமாகும்.

‘Lawyer’ job in the Electricity Board. No exam! Salary of Rs. 80,000 per month? Legal consultant opportunity!

மின்சார வாரியத்தில் ‘வக்கீல்’ வேலை. தேர்வு கிடையாது! மாதம் ரூ.80,000 சம்பளம்? லீகல் கன்சல்டன்ட் வாய்ப்பு!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் (TNPDCL) காலியாக உள்ள ‘சட்ட ஆலோசகர்’ (Legal Consultant) பணியிடங்களை நிரப்பத் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தேர்வு எழுதிப் போகும் வேலை இல்லை, நேரடி நியமனம் (Contract Basis) தான்!

என்ன வேலை? மின்சார வாரியம் தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. அவற்றைச் சட்டரீதியாகக் கையாள்வது, வாரியத்திற்குத் தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்குவதுதான் இவர்களது முக்கிய பணி.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இந்த வேலைக்கு பிரஷர்கள் (Freshers) விண்ணப்பிக்க முடியாது. சட்டத் துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் தேவை.

கல்வித் தகுதி: சட்டத்துறையில் இளங்கலை பட்டம் (Law Degree) பெற்றிருக்க வேண்டும்.
முக்கிய தகுதி: ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் (Retired District Judges) அல்லது ஓய்வு பெற்ற மூத்த சிவில் நீதிபதிகள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகக் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களும் முயற்சி செய்யலாம் (குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு).
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். (ஓய்வு பெற்றவர்களுக்கு இது ஒரு செகண்ட் இன்னிங்ஸ் வாய்ப்பு!

சம்பளம்: “வேலை பளுவுக்கு ஏற்ற ஊதியம் உண்டு!” தேர்வு செய்யப்படும் சட்ட ஆலோசகர்களுக்கு, அவர்களின் அனுபவம் மற்றும் பதவிக்கு ஏற்ப மாதம் ரூ.80,000 வரை (தோராயமாக) தொகுப்பூதியமாக (Consolidated Pay) வழங்கப்படும். இதுபோகப் போக்குவரத்துப் படி உள்ளிட்ட வசதிகளும் கிடைக்க வாய்ப்புள்ளது.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு கிடையாது. விண்ணப்பதாரர்களின் அனுபவம் மற்றும் நேர்காணல் (Interview) அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி? விருப்பமுள்ளவர்கள் https://www.tnpdcl.org/en/tnpdcl/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, தேவையான ஆவணங்களுடன் இணைத்து, சென்னையில் உள்ள மின்சார வாரியத் தலைமை அலுவலகத்திற்குத் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி: பிப்ரவரி 2, 2026.

என்னதான் இது ஒப்பந்த அடிப்படையிலான வேலைன்னாலும், ‘டிஎன்இபி’ (TNEB) லீகல் அட்வைசர்னு விசிட்டிங் கார்டுல போடுறது தனி கெத்துதான். ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு இது ஒரு ரிலாக்ஸான, அதே சமயம் கௌரவமான பதவி. பிரைவேட் பிராக்டீஸ்ல இருக்குற சீனியர் வக்கீல்களும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மின்சார வாரியத்தோடு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

NOTIFICATION & APPLY LINK


INTERNET CAFE WEB

We provide reliable digital information, career guidance, and technology-focused content to help individuals grow in today’s online world. INTERNET CAFE WEB supports students, job seekers, and tech enthusiasts with easy-to-understand resources, timely updates, and practical knowledge for informed decisions.

Recent Posts

  • All Post
  • Beauty
  • Competition
  • CSC
  • Daily updates
  • Education
  • INTERNSHIP
  • Jobs
  • Land records
  • Law
  • Lifestyle
  • Photography
  • Scheme
  • TamilNadu Certified Copy Download-Online
  • TNPSC
  • Travel
    •   Back
    • TNTRB

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.

Tags

Edit Template

About

“INTERNET CAFE ” is a channel meant for Techincal Job Updates, Career & Education Guidance, and Science & Technical Content.

Tags

Recent Post

  • All Post
  • Beauty
  • Competition
  • CSC
  • Daily updates
  • Education
  • INTERNSHIP
  • Jobs
  • Land records
  • Law
  • Lifestyle
  • Photography
  • Scheme
  • TamilNadu Certified Copy Download-Online
  • TNPSC
  • Travel
    •   Back
    • TNTRB

You cannot copy content of this page