Idhu Namma Aattam – 2026 | CM YOUTH FESTIVAL | Sports Development Authority of Tamilnadu
மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, SDAT நடத்தவுள்ள முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – ‘இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகளுக்கான இணையதள முன்பதிவு இன்று முதல் தொடக்கம்.
🏅தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய, மாவட்ட அளவில் தடகளம், வாலிபால், கேரம், கயிறு இழுத்தல் போட்டிகளும், மாநில அளவில் கபாடி மற்றும் Street Cricket போட்டிகளும், இது தவிர கலை மற்றும் பண்பாடு சார்ந்த போட்டிகளும் ஜனவரி 22 முதல் பிப்ரவரி 8 வரை நடைபெற உள்ளன.
🥎ஆர்வமுள்ள இளைஞர்கள் http://sdat.tn.gov.in மற்றும் https://cmyouthfestival.sdat.in இணையதளங்களின் வழியாக இப்போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்யலாம்.
🏅குறிப்பாக மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்காக மாவட்ட அளவில் தடகள போட்டிகள் நடைபெறவுள்ளன.
💰இப்போட்டிகளுக்கான பரிசுத்தொகைக்கென மொத்தம் ரூ 20.48 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
🎉தமிழ்நாட்டு இளைஞர்கள் ‘இது நம்ம ஆட்டம் 2026’-ல் பெருவாரியாக பங்கேற்று, தங்களுடைய Sports Talent-ஐ வெளிப்படுத்த அருமையான வாய்ப்பு…



