ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV) அறிவிக்கை எண் : 07/2025 நாள் 25.04.2025 மற்றும் அதன் பிற்சேர்க்கைகள் தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தகுதி விவரங்கள் 22.10.2025 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
முதல் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வின் முடிவில் உள்ள இடங்களை உத்தியோகபூர்வ உள்நிலை முன்னுரிமைகள், துறைச் சார்ந்த மற்றும் சமூகத் துறை சார்ந்த பணியிடங்களுக்கான காலியிடங்களை நிரப்புவதற்காக இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரிசை 24.02.2026 முதல் 25.02.2026 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், எண்.3, தேவராஜன் சாலை (பிராட்வே பேருந்து நிலையம் அருகில்), சென்னை – 600 003 இல் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மேற்குறிப்பிட்ட இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் ([www.tnpsc.gov.in](http://www.tnpsc.gov.in)) வெளியிடப்பட்டுள்ளது. மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான நாள், நேரம் மற்றும் இட விவரங்கள் அடங்கிய அழைப்பாணைகள் தேர்வர்கள் தேர்வாணைய இணையதளமான ([www.tnpsc.gov.in](http://www.tnpsc.gov.in)) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் தேர்வர்களுக்கு அதற்கான விவரம் குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (E-mail) மூலமும் மட்டும் தெரிவிக்கப்படும். இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அழைப்பாணை தனியே அஞ்சல் மூலம் அனுப்பப்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் அனைத்து தேர்வர்களும் தங்களது சான்றிதழ்கள் அனைத்தையும் அசல் மற்றும் நகல் உடன் கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. தேர்வர்கள் மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்துகொள்ளத் தவறினால் அவர்களுக்கு மறுபடியும் அழைக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
MEMO DOWNLOAD LINK – FEB 24
MEMO DOWNLOAD LINK – FEB 25


