ஆசிரியர் பயிற்சித் தேர்வுக்கு மார்ச் 26 முதல் விண்ணப்பம்
மே, ஜூனில் நடைபெற உள்ள இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வுக்கு தனித் தேர்வர்கள் மார்ச் 26 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு (இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு) மே, ஜூன் மாதங்களில் நடைபெற உள் ளது. இதற்கு தனித் தேர்வர் களிடம் இருந்து விண்ணப்பங் கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவத்தை www. dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மார்ச் 26-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பின்னர்அதை பூர்த்திசெய்து, ஏற்கெனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களு டன், சம்பந்தப்பட்ட மாவட்டத் தில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனத்தில் உரிய தேர்வுக் கட்டணம் செலுத்தி ஏப்.3-ம் தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
அதற்குள் விண்ணப்பிக் கத் தவறிய தனித் தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் (தட்கல்) கீழ் ஏப்.6, 7-ம் தேதி களில் விண்ணப்பிக்கலாம். சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும். தபாலில் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.


