அண்ணன் சீர் திட்டம்! விண்ணப்பிப்பது எப்படி?
திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் + பட்டுப்புடவை!

தகுதிகள் :
* மணமக்கள் சட்டப்பூர்வ திருமண வயதை நிறைவு செய்திருக்க வேண்டும்.
* மணப்பெண்ணின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
* குடும்ப அட்டையில் மணப்பெண்ணின் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும்.
* பிற அரசுத் திருமண நிதியுதவித் திட்டங்களில் பயன் பெற்றிருக்கக் கூடாது.
எப்போது விண்ணப்பிக்கலாம்?
* திருமணத்துக்கு 60 நாட்களுக்கு முன்பிருந்து திருமண நாள் வரை விண்ணப்பிக்கலாம்.
* 05.10.2026 – 15.01.2027 காலகட்டத் திருமணங்களுக்கு, 15.01.2027 வரை விண்ணப்பிக்கலாம்.
தேவையான விவரங்கள்:
🔹 ஆதார் எண்
🔹 குடும்ப அட்டை எண்
🔹 திருமணப் பத்திரிகை (பதிவேற்றம் செய்ய வேண்டும்)
எங்கே, எப்படி விண்ணப்பிப்பது?
* அரசு இ-சேவை மையங்கள் அல்லது www.tnesevai.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
* ஆதார் மற்றும் குடும்ப அட்டை எண்கள் மூலம் தகுதி சரிபார்க்கப்படும்.
* திருமணப் பத்திரிகையைப் பதிவேற்ற வேண்டும்.
* தகுதியான விண்ணப்பங்களுக்கு தனித்துவ அடையாள எண் வழங்கப்படும்.
விண்ணப்ப நிலை குறித்த தகவல் குறுஞ்செய்
அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க
1. விண்ணப்பதாரர் ஆதார் எண்
2.ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி
3. மணமகன் பெயர் மற்றும் பிறந்த தேதி
4. திருமண தேதி
5. திருமணம் நடைபெறும்/நடைபெற்ற இடத்தின் விவரங்கள்
6. திருமண அழைப்பிதழின் நகல் – ஆகியவை தயாராக வைத்திருக்க வேண்டும்.
7. Applicant must be Female to avail Annan Seer Scheme.
விண்ணப்பத்தின் முக்கிய அம்சங்கள்:
✅ ஆதார் மற்றும் குடும்ப அட்டை மூலம் தகுதி சரிபார்க்கப்படும்.
✅ தகுதியான விண்ணப்பங்களுக்கு தனித்துவ அடையாள எண் வழங்கப்படும்.
✅ விண்ணப்ப நிலை குறித்த தகவல்கள் SMS, WhatsApp மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
⚠️ முக்கிய நிபந்தனைகள்:
🔸 திருமணம் முடிந்த 15 நாட்களுக்குள் தமிழ்நாட்டில் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும்.
🔸 விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணம் தெரிவிக்கப்படும்.
🔸 நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு உண்டு.
📢 இந்தத் தகவலைத் திருமணம் செய்யவிருக்கும் பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு SHARE செய்யுங்கள்!


