விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு! கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன்களுக்கு ரூ.75,000 வரை தள்ளுபடி – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!
அரசாணையின் முக்கிய விவரங்கள்:
📅 கடன் பெற்ற காலம்:
01.05.2025 முதல் 31.03.2026 வரை.
💰 கடன் தள்ளுபடி வரம்பு:
ஒரு விவசாயி பெற்ற பயிர்க்கடன் ரூ.75,000 வரை இருந்தால், முழுக் கடனும் தள்ளுபடி செய்யப்படும்.
ரூ.75,000-க்கு மேல் கடன் பெற்றிருந்தால், அதிகபட்சமாக ரூ.75,000 வரை தள்ளுபடி வழங்கப்படும். மீதமுள்ள தொகையை விவசாயி செலுத்த வேண்டும்.
அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியப் புள்ளிவிவரங்கள்:
1. ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்ற 5,90,621 விவசாயிகளுக்கு முழுக் கடன் தள்ளுபடி வழங்கப்படும்.
2. ரூ.75,000-க்கு மேல் பயிர்க்கடன் பெற்ற 7,34,260 விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.75,000 வரை தள்ளுபடி வழங்கப்படும்.
3. தகுதியான விவசாயிகளின் கடன் கணக்குகள் மற்றும் விவரங்கள் தமிழ்நாடு மின்னணு ஆளுமை முகமை (TNeGA) மூலம் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.
4. 19.06.2026-க்கு முன்னதாகவே கடனை முழுமையாகச் செலுத்திய தகுதியான விவசாயிகளுக்கும் அரசாணையில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளின்படி தள்ளுபடித் தொகை கணக்கிடப்படும்.
5. ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களில் அல்லது ஒரே கூட்டுறவு சங்கத்தில் பல பயிர்க்கடன்கள் பெற்றுள்ள விவசாயிகளுக்கு, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி மற்றும் அதிகபட்சத் தள்ளுபடி விதிமுறைகள் பொருந்தும்.
6. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பயிர்க்கடன் பெற்றிருந்தால், குடும்ப அடிப்படையிலான தகுதி மற்றும் தள்ளுபடி வரம்பு தொடர்பான நிபந்தனைகளும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அரசின் நிதி ஒதுக்கீடு:
2026–2027 ஆம் நிதியாண்டிற்கான பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தைச் செயல்படுத்த மொத்தம் ரூ9062.83 கோடி நிதி ஒதுக்கீடு .



