Follow Us on

Internet cafe

Follow Us on

Internet cafe

Join our channel

Internet cafe

அனைத்து குடிமக்களுக்கும் அரசு சேவைகளை எளிதாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதே INTERNET CAFE WEB PORTAL-லின் முக்கிய நோக்கமாகும்.

Tamilnadu Ration Shop Product Complaint Cell

பதுக்கல்காரங்களுக்கு தமிழக அரசு போட்ட பூட்டு! துவரம் பருப்பு, அரிசி, சர்க்கரை இனி லிமிட் தான்! 5 டன்னுக்கு மேல் வைத்தால் ஜெயில் தான்! கமிட்டி அமைப்பு – புகார் சொல்ல 1967-க்கு போன் பண்ணுங்க!

பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், நியாயமான விலையில் கிடைக்க இருப்பு வரம்பை நிர்ணயித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு, 1955-ஆம் ஆண்டு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் பிரிவு 3-ன் கீழ் மிக முக்கியமான கட்டுப்பாட்டு ஆணைகளை பிறப்பித்துள்ளது!

எந்த பொருட்களுக்கு கட்டுப்பாடு?
– துவரம் பருப்பு
– உளுத்தம் பருப்பு
– அரிசி / நெல்
– சர்க்கரை

இது எதற்காக?

மாநிலத்தில் துவரம் பருப்பு, அரிசி மற்றும் சர்க்கரை போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை கட்டுப்பாட்டில் வைக்கவும், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகள் மூலம் அரிசி மற்றும் பிற பொருட்களின் விநியோகம் தடையின்றி தொடரவும் அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்கிறது!

யார் எவ்வளவு வைக்கலாம்? – அரசு நிர்ணயித்த லிமிட் இதோ!

இந்த வரம்புகள் அரசிதழில் வெளியிடப்பட்ட 13.11.2026-ஆம் நாள் முதல் 3 மாதங்கள் வரை துவரம் & உளுத்தம் பருப்புக்கும், 31.01.2027 வரை அரிசி மற்றும் நெல்லுக்கும்* நடைமுறையில் இருக்கும்! எந்த ஒரு நபரோ அல்லது நிறுவனமோ இதற்கு மேல் இருப்பு வைத்திருக்கக் கூடாது!
வகைதுவரம் பருப்புஉளுத்தம் பருப்புஅரிசி மற்றும் நெல்சர்க்கரை
மொத்த வணிகர்கள் 200 மெ. டன்200 மெ. டன்2000 மெ. டன்தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வணிகர்களுக்கு
சில்லறை வணிகர்கள் 5 மெ. டன்5 மெ. டன்8 மெ. டன்1000 குவிண்டால் (15.10.2026 முதல்)
**பெரிய தொடர் சில்லறை விற்பனை நிறுவனங்கள்**5 மெ. டன் (ஒரு விற்பனை நிலையத்திற்கு) 200 மெ.டன் – ஒவ்வொரு கிடங்கு5 மெ. டன் (ஒரு விற்பனை நிலையத்திற்கு) 200 மெ.டன் – ஒவ்வொரு கிடங்கு8 மெ. டன் வரை ஒவ்வொரு சில்லறை விற்பனை நிறுவனங்கள்
ஆலை உரிமையாளர்கள் மற்றும் பதனிடுவோர் கடந்த 3 மாதங்களின் சராசரி பதனிடும் அளவு அல்லது ஆண்டுத் திறனில் 25%, இவற்றில் எது அதிகமோ அதுஅதே போல் 25%ஒரு மாத கால உற்பத்தி அளவுக்குள்
இறக்குமதியாளர்கள் சரக்கு வந்து சேர்ந்த நாளிலிருந்து 45 நாட்களுக்கு மேல் கூடாது45 நாட்களுக்கு மேல் கூடாது45 நாட்களுக்கு மேல் கூடாது
பதுக்கலை தடுக்க அதிரடி கமிட்டி!

பதுக்கல் மற்றும் கருப்பு சந்தை நடவடிக்கைகளை கண்காணித்து தடுக்க ஒரு சிறப்பு கண்காணிப்புக் குழு (Committee) அமைக்கப்பட்டுள்ளது!

எங்காவது அதிக விலைக்கு விற்றாலோ, பதுக்கி வைத்திருந்தாலோ பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்கலாம்!



புகார் சொல்ல இலவச ஹெல்ப்லைன்:
*📞 1967 / 1800 425 5901

இந்த எண்களுக்கு போன் செய்தால் போதும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்!
இதனால் என்ன பயன்?
வியாபாரிகள் பருப்பு, அரிசி, சர்க்கரையை பதுக்கி வைத்து விலையை ஏற்றுவார்கள்! இப்போ இந்த லிமிட் வந்ததால், சந்தையில் பொருட்கள் தாராளமாக கிடைக்கும்! விலை கட்டுக்குள் இருக்கும்! சாதாரண மக்களுக்கு நியாயமான விலையில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும்!


INTERNET CAFE WEB

We provide reliable digital information, career guidance, and technology-focused content to help individuals grow in today’s online world. INTERNET CAFE WEB supports students, job seekers, and tech enthusiasts with easy-to-understand resources, timely updates, and practical knowledge for informed decisions.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

You cannot copy content of this page